பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட 20ம் திருத்தச் சட்ட வரைவு… இன்று பிரதமர் கையில் ஒப்படைப்பு!

0
11

வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழு நேற்று கூடிய அதனை ஆராய்ந்துள்ளது.

இதன்போது சட்ட வரைவில் பல திருத்தங்களை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பது மற்றும் உயர் பதவிகளை வகிக்க அனுமதி வழங்குவதில்லை, அமைச்சரவையின் எண்ணிக்கை வரையறுத்தல், கணக்காய்வு ஆணைக்குழு ஏற்கனவே இருந்தது போல் சுயாதீனமாக இயங்க செய்வது உள்ளிட்ட பல திருத்தங்கள் இதன் போது முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் புதிய திருத்தங்களுடன் அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் அது இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட உள்ளது.

இதன் பின்னர் நாளைய தினம் நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் பிரதமர் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அமைச்சரவையில் அந்த அறிக்கை நிறைவேற்றப்பட்ட பின்னர், புதிய வர்த்தமானி வெளியிடப்பட உள்ளது.