பளை தம்பகாமம் காட்டுப்பகுதியில் மனித எலும்புகள் சில மீட்பு!

0
22

பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள குளத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன .

காட்டுப்பகுதியின் ஊடாக ஊர் மக்கள் சென்ற வேளை துர்நாற்றம் வீசியதுடன் சில எலும்புத் துண்டுகள் மற்றும் ஆடைகளை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து குறித்த காட்டுப் பகுதியிலிருந்து மேலும் சில எலும்புகளையும் மண்டை ஓட்டையும் மீட்டுள்ளனர்.

தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த எலும்புக்கூடுகள் அப் பிரதேசத்தில் வசித்துவந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க சுந்தரமூர்த்தி என்பவரது உடல் பகுதிகள் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சில காலமாக நோய்வாய்ப்பட்டு உள்ள நிலையில் இவ்வாறு இறந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .