பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடனும் கல்வியமைச்சுடனும் பேச்சுவார்த்தை

0
12

ஜனவரி மாதத்தில் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என குடும்ப சுகாதார பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் சித்திமல்லி சில்வா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடனும் கல்வியமைச்சுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலவரத்தை கருத்தில் கொண்டு மேல் மாகாணத்தை தவிர ஏனைய பகுதிகளில் ஜனவரியில் பாடசாலைகள் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கொரோனா வைரஸ் நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் பாடசாலையை ஆரம்பிப்பது குறித்து திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் பகுதிகளில் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அதிபர்கள் தீர்மானிக்கலாம், பாடசாலை சிற்றூண்டி சாலைகளை ஆரம்பிக்க முடியாது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போதும் அவர்கள் திரும்பிவரும் போது பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர் சித்திமல்லி சில்வா தெரிவித்துள்ளார்.