பாடசாலையில் நான்கு மாணவிகள் திடீரென சுகவீனமுற்றதன்….

0
20

காலி – ஹபராதுவ, லணுமோதர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் நான்கு மாணவிகள் திடீரென சுகவீனமுற்றதன் காரணமாக காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவிகள் அருந்திய தண்ணீரில் தின்னர் திரவம் கலந்து இருந்தால், மாணவிகள் சுகவீனமுற்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இடைவேளையில் உணவு உண்ட பின்னர் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றிருந்த தண்ணீரை பருகி உள்ளனர்.

இதனையடுத்து சுகவீனமுற்ற மாணவிகளை பாடசாலையின் ஆசிரியர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

10ஆம் தரத்தில் பயிலும் மாணவிகளே இவ்வாறு சுகவீனமடைந்துள்ளனர். மாணவிகள் கொண்டு சென்றிருந்த தண்ணீரில் எவராவது தின்னர் திரவத்தை கலந்தனரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும் சுகவீனமுற்ற மாணவிகள் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.