பிக்பாஸ் போட்டியாளரின் ரசிகர்கள் மீது நடிகை மோனல் கஜ்ஜார் புகார்

0
37

ற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் ஒருவரின் ரசிகர்கள் மீது மோனல் கஜ்ஜார் புகார் அளித்துள்ளார்.

தமிழில் சிகரம் தொடு மற்றும் வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மோனல் கஜ்ஜார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட, பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். கடந்த ஞாயிறு வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இவர் வெளியேறினார்.

இந்தநிலையில் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற, இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிற அபிஜித் என்பவரின் ரசிகர்கள் மீது, மோனல் கஜ்ஜார் தனது குடும்பத்துடன் சேர்ந்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் தன்னை அவதூறான வார்த்தைகளால், அபிஜித்தின் ரசிகர்கள் விமர்சிப்பதாக அந்த புகாரில் மோனல் கஜ்ஜார் குறிப்பிட்டுள்ளார்.