பிக்பாஸ் போட்டியில் பாலாஜி முருகதாஸ் கூறியது உண்மையா..? இதற்காகத்தான் அவர் அந்த பொய்யைச் சொன்னாரா..?

0
93

பிக்பாஸ் 4 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் தனது பெற்றோரைப் பற்றி சொன்னது அனைத்தும் பொய் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4ல், கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது, இதில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தான் கடந்து வந்த பாதையைப் பற்றி கூறியபோது, தனது பெற்றோர் குடிப்பவர்கள், தூங்கும்போது எனது தந்தை குடித்துவிட்டு கேஸ் டியூபால் என்னை அடிப்பார், ஒரு குழந்தைய பெற்று வளர்க்க முடியவில்லை என்றால் நீங்கள் ஏன் குழந்தை பெற்று கொள்கிறீர்கள் என பேசியிருந்தார்.

பாலாஜியின் இந்த பேச்சு வைரலான நிலையில், எவிக்சனில் இருந்து தப்பவே இப்படி பேசியுள்ளார் என விமர்சிக்கும் நெட்டிசன்கள், உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் அப்பாவின் அம்மாவைப் பற்றி பேசி இப்படி அவர்களின் மானத்தையே வாங்கிவிட்டாயே எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பலரோ அப்படி ஒரு பெற்றோரை நினைத்து நீ வெட்கப்படும் போது உன்னை போன்ற ஒரு மகனை நினைத்து அவர்களும் வெட்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நெட்டிசன் ஒருத்தர் கூறுகையில், பாலாஜி ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பையன், இவரது தந்தை ஒரு தொழில் அதிபர் தாயோ இல்லத்தரசி. ஆனால் பாலாஜி முருகதாஸ் தனது பெற்றோர் இருவரும் குடிகாரர்கள் எனக் கூறியுள்ளதை நம்பமுடியவில்லை என தெரிவித்துள்ளார்.