பிக்பாஸ் 4, இதுவரையில் தெரிவான போட்டியாளர்களின் விவரங்கள்

0
11

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் நேரத்தை செலவிட டிவியின் முன் உட்கார்ந்து இருப்பதும், ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதும் என பொழுதை கழிக்கின்றனர்.

இதையடுத்து, ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருந்த பிக்பாஸ் சீசன் 4 கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4-க்கான வேலைகள் துவங்கிவிட்டதால் தமிழிலும் இதற்கான வேளைகளில் இறங்கி திட்டம் போட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்ப்போது முதற்கட்ட வேலையாக போட்டியார்களை தேர்வு செய்து வருகின்றனர். அதன்படி, நடிகை அதுல்யா ரவி, கிரண் ரதோட், கனா காணும் காலங்கள் இர்பான், குக் வித் கோமாளி புகழ், ரம்யா பாண்டியன், காமெடி நடிகை வித்யூ லேகா ராமன் உள்ளிட்டோர் இப்போதைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.