பின்னால் வந்த கார் மோதியதில் பிரபல டிவி நடிகை படுகாயம்…

0
68

பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை ஆஞ்சல் குரானா. இவர் பல இந்தி தொடர்களில் நடித்துள்ளார்.

சப்னே சுஹானே லடக்பன் கே, அர்ஜுன், சவ்தான் இந்தியா, ஆஹத், சிஐடி உட்பட ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார்.

நான் காலில் காயத்துடன் வீட்டில் சோகமாக இருப்பதைப் பார்த்து என் குடும்பத்தினர் என் ஃபிரண்ட்ஸ்களை வீட்டுக்கு அழைத்தார்கள். என் பிறந்த நாளை, உற்சாகமாகக் கொண்டாடினார்கள். நான் ஒரு காலை அசைக்காமல் கட்டிலின் மேலே வைத்தபடி அதை ரசித்தேன். அவர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு ஆஞ்சல் குரானா தெரிவித்துள்ளார்.

நான் சிரிக்கிறேன். என் குடும்பத்தினரும் நண்பர்களும் ஆதரவாக இருக்கிறார்கள். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் குணம் பெற வேண்டி ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி நடிகை ஆஞ்சல் குரானா கூறும்போது, கடந்த சில நட்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.

எனது அபார்ட்மென்ட்டின் கார் பாக்கிங் பகுதியில் என் காரை நிறுத்திவிட்டு படிக்கட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தனது காரை பின்பக்கமாக எடுத்தார். பின்னால் நான் நிற்பதை கவனிக்காமல் என் மீது பயங்கரமாக மோதினார். இதில் நான் விழுந்துவிட்டேன். என் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டேன்.

அங்கு எனக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. காலில் கட்டுப்போட்டார்கள். 15 நாள் ஓய்வெடுக்கும்படி கூறியுள்ளனர். அதனால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன் என்றார். அவர் மேலும் கூறும்போது, முஜே சாதி கரோகி என்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றதில் இருந்தே எனக்கு ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது. அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.

அந்தப் போட்டியில் வெற்றி பெற்று டெல்லி வந்ததும் என்னை சில நாய்கள் விரட்டி விரட்டி கடித்தன. மற்ற மருத்துவமனைகளில் மருந்து கிடைக்காததால் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அந்த சம்பவம் நடந்த அடுத்த இரண்டு மாதத்தில் இந்த விபத்தைச் சந்தித்து இருக்கிறேன். இது வருத்தமாக இருக்கிறது. இப்போது குணமாகி வருகிறேன். விரைவில் நலம் பெற்றுவிடுவேன்.