பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் நடைபெற்ற பாகுபலி நடிகரின் திருமணம்

0
52

நடிகர் ராணா டகுபட்டி, மிஹகா பஜாஜ் திருமணம் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராமா நாயுடு ஸ்டுடியோவில் நடைபெற்றது. திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என குறைந்த அளவில் தான் கலந்து கொண்டனர்.

தெலுங்கு திரையுலகத்திலிருந்து நடிகர் ராம்சரண், அவரது மனைவி உபாசானா, நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோர் மட்டுமே நேரடியாக கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்கள். நடிகர் நாக சைதன்யா, சமந்தா ராணாவின் மிக நெருங்கிய உறவினர்கள் என்பதால் அவர்களும் கலந்து கொண்டனர்.

மகேஷ்பாபு, நானி உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்கள் நேற்றிரவே சமூக வலைத்தளங்களில் வாழ்த்தினார்கள். மேலும், பல நடிகர்கள், நடிகைகள் புதுமணத் தம்பதியினரை சமூக வலைத்தளங்களில் வாழ்த்தினார்கள். திருமண விழாவை யூடியூப் மூலமாக விஆர் தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு செய்தார்கள். அதனை பிரபலங்கள் பலரும் வீட்டிலிருந்தே பார்த்து ரசித்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

திருமணத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டாலும் ஆடம்பரத்திற்கு சற்றும் குறைவில்லை. திருமணத்தில் மாஸ்க், சமூக இடைவெளி எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. ஆனால் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா தொற்று அடுத்த சில மாதங்களுக்குள் ஒழிந்தால் அப்போது திருமண வரவேற்பு நடக்க வாய்ப்புள்ளது என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.