பிரபல இயக்குனருடன் இணைந்த நயன்தாரா

0
16

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘பிரேமம்’. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

சில மாதங்களுக்கு முன்புதான் தனது அடுத்த படத்தை அறிவித்தார் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்கவுள்ளார். ‘பாட்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை யுஜிஎம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரித்து வருகிறது.
 தற்போது இதில் பகத் பாசிலுக்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘பாட்டு’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கேரளாவில் தொடங்கவுள்ளது. தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு மற்றும் பாடல்கள் உருவாக்கம் ஆகிய பணிகளை அல்போன்ஸ் புத்திரன் கவனித்து வருகிறார்.