பிரபல நடிகையின் டாப்லெஸ் போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்… துணிக்கடை இல்லையோ எனவும் கேள்வி (படம்)

0
36

பிரபல நடிகை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள டாப்லெஸ் போட்டோ வைரலாகி வருகிறது. கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம், தமிழில் அதிகம் அறியப்பட்டவர், இந்தி நடிகை ராதிகா ஆப்தே.

அதற்கு முன் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உட்பட சில படங்களில் நடித்திருந்தார்.

இந்தியில், த வெயிட்டிங் ரூம், ஷோர் த சிட்டி, பட்லாபூர், ஹராம், லயன், பேட்மேன், அந்தாதுன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பெங்காலி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ராதிகா ஆப்தே, குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். குறும்படம் ஒன்றையும் இயக்கி உள்ளார். வெப் சீரிஸ்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

மீ டு விவகாரம் எழுந்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து பேசி இருந்தார் நடிகை ராதிகா. சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பது உண்மைதான் என்றும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்த ராதிகா, கடந்த சில மாதங்களுக்கு முன் தென்னிந்திய இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எதையும் வெளிப்படையாகப் பேசுபவர் ராதிகா ஆப்தே.

லண்டனைச் சேர்ந்த பெனடிக்ட் டெய்லர் என்பவரைக் காதலித்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ராதிகா ஆப்தே, திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த கொரோனா காலகட்டத்தில் லண்டனில் கணவருடன் வசித்து வருகிறார்.

இப்போது அவர் டாப்லெஸ் போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். பீச் ஒன்றில் நின்றபடி மேல் சட்டை இல்லாமல் அவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோவை லட்சக் கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர். பல நெட்டிசன்கள் கமென்ட்களை தெளித்துள்ளனர். ஐயையோ.. துணிய எங்கம்மா? என்று ஒருவர் கேட்டுள்ளளார். சிலர், பீச்ல நிர்வாணமாகவா இருக்கிறீங்க? என்று ஆச்சரியமாகக் கேட்டுள்ளனர்.

ஒருவர், உங்களுக்கு பின்னால கூட ஒருத்தர் அதே போஸ்ல இருக்காப்ல, இதென்ன நிர்வாண பீச்சா? என்று விசாரித்துள்ளார். இன்னொருவர், ஏன் பாதி போட்டோ மட்டும் போஸ்ட் பண்ணியிருக்கீங்க? என்று கேட்டுள்ளார். துணி விற்கிற கடையெல்லாம் இருக்கே, உங்களுக்குத் தெரியாதா? இப்படியெல்லாம் அலையாதீங்க? என்று வெறுப்பாகக் கூறியுள்ளார் ஒரு நெட்டிசன். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.