பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்ம்

0
27

நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் பிரபல நடிகரின் மகன் அறிமுகமாக இருக்கிறார்.

நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கருணாஸ் ஆகியோரின் வாரிசுகள் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தபட்டனர். அவர்களைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

சந்தானம் தற்போது கார்த்திக் இயக்கத்தில் ”டிக்கிலோனா” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்தானத்தின் மகன் நிபுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் பரவி பின்னர் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நிபுன் இயக்குனர் ராகவன் இயக்கத்தில், நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் நிபுன் முழுப்படத்திலும் இடம்பெறும் அளவிற்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.