பிரிட்டன் நாடாளுமன்றில் கார்த்திகைப் பூ..! ஒரு வரியில் பதிலளித்த பிரிட்டன் தூதரகம்…

0
42

தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவேந்தும் தினத்தன்று (நவம்பர் 27) பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முன்பகுதியில் கார்த்திகைப் பூ ஒளிரச் செய்யப்பட்டமை பொலிஸாருடன் தொடர்புபட்ட விடயமாகும் என்று இலங்கைக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் நடைபெற்ற மாவீரர் தின நினைவேந்தலின்போது, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முன்பகுதியில் ‘கார்த்திகைப் பூ’ ஒளிரச் செய்யப்பட்டமை குறித்து கொழும்பு ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

குறித்த ஊடகத்தின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரிட்டன் தூதரகம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பேரணிகள் உட்பட அனைத்து விடயங்களையும் கையாள்வது பொலிஸாருடன் தொடர்புபட்ட விடயம் எனப் பிரிட்டன் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பிரிட்டன் தூதரகம் ஒரு வரியில் பதிலளித்துள்ளது எனவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.