பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ். மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 8 பேருக்கு தொற்று உறுதி

0
43

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 308 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வட பகுதியைச் சேர்ந்த எவருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. எனினும், இந்த பரிசோதனையில் வடக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது.

இதன்படி, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெறுபவர், மன்னார் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவர், விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏனைய தொற்றாளர்கள், ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.