புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்… புதிய சபாநாயகர் இவர்தான்

0
10

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

காலை 9.30 மணிக்கு 9வது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

அதற்கமைய முதலாவது கூட்டத்திற்காக 223 உறுப்பினர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் இன்னும் தெரிவு செய்யப்படவில்லை.

இன்றையதினம் நாடாளுமன்றம் வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆசன உரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.