புற்று நோயால் கை விடப்பட்டவர்களுக்கு உதவிய ஹரிஷ் கல்யாண்

0
7

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஹரிஷ் கல்யாண், புற்று நோயால் கை விடப்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.

“பியார் பிரேமா காதல்”, “இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்”, “தாராள பிரபு” போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘புற்று நோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களை இறுதி நிமிடங்கள் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரின் 8 ஆண்டுகால சேவைக்கு என் சிறிய பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீமாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீயிடம் ஹரிஷ் கல்யாண், ரூபாய் 3,70,000 நன்கொடையாக கொடுத்திருக்கிறார்.