புலம்பெயர் தமிழர் கொடுத்த முறைப்பாடு blue ocean முதலாளிக்கு பிடியாணை

0
12

இலங்கையில் முதலீடு செய்யும் விடயத்தில் தன்னை ஏமாற்றியதாக ஒரு புலம்பெயர் தமிழர் மேற்கொண்ட முறைப்பாட்டின் காரணமாக பிரபல கொழும்பு வர்த்தகர் மீது நேற்று(14) பிடியாணை பிறப்பித்துள்ளது கொழும்பு மவுன்ட்லவேனியா நீதிமன்றம்.

கொழும்பின் பிரபல வர்த்தகர்களான சிவராஜா துமிலன் மற்றும் சுறானி துமிலன் ஆகியோருக்கு எதிராகவே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கான தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

கொழும்பில் தொர்மாடி கட்டிடங்களை நிறுவிவரும் Blue Ocean Breeze condominium property Developers என்ற நிறுவனம் கொழும்பு Layards வீதியில் ஆறு தொடர் மாடிகளை அமைத்துத் தருவதாகக் கூறி சுமார் 275 மில்லின் ரூபாயை பெற்றுக்கொண்டதாக மணுதாரர் குற்றம் சுமத்தியிருந்தார். நீண்டக காலமாக நிதிமோசடியில் ஈடுபட்டு வந்துள்ள இந்த நிறுவனம் சுமார் 1.5 பில்லியன் ரூபாய்களை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.