பூநகரி 4ம் கட்டை தோட்ட காணிக்குள் இரவு புகுந்த காட்டு யானை

0
16

பூநகரி 4ம் கட்டை பகுதியில் இரவு புகுந்த காட்டு யானையால் பயன்தரு தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய் இரவு குறித்த பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் தோட்ட காணிக்குள் புகுந்த யானை 20 தென்னை மரங்களை அழித்துள்ளது.

அண்மை நாட்களாகக் குறித்த பகுதியில் யானைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும், பயன்தரும் மரங்களை அழித்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

யானை தொல்லையிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.