பொலிசாரின் அதிரடி நடவடிக்கை – ஜெயா வீட்டில் 52 மில்லியன் பவுண்டுகள் மீட்பு!

0
197

கடந்த 7 நாட்களுக்கு முன்னர் லண்டன் பொலிசார் நாடு முழுவதும், நடத்திய வேட்டை ஒன்றில் சுமார் 700 பேரை கைது செய்து இருந்தார்கள். பிரித்தானியாவில் இயங்கி வந்த மிகப்பெரிய போதைவஸ்த்து கடத்தும் குழு தான் இவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் பாவிக்கும் மோபைல் போனின் விலை , £3,000 பவுண்டுகள். காரணம் அதில் போடப்பட்டுள்ள சாப்ஃவியர் அப்படி. அந்த மென் பொருள், இவர்கள் பேசுவதை பொலிசார் ஒட்டுக் கேட்க முடியாதவாறு தடுக்கும்.

அமெரிக்க அதிபர் இஸ்ரேல் பிரதமர்கள் பாவிக்கும் இந்த வகையான போன்களையே இவர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இதனால் இவர்களை வருடக் கணக்கில் பொலிசாரால் பிடிக்க முடியவில்லை. சமீபத்தில் தான் இதனை கிராக் செய்து, ஒட்டுக் கேட்க்க ஒரு சாதனத்தை பொலிசார் கண்டு பிடித்தார்கள். அதனூடாக ஒட்டுக் கேட்டு அனைவரையும் கைது செய்துவிட்டார்கள். இதில் தப்பி இருந்தவர் ஜேயா பட்டேல் என்னும் ஒரு இந்தியர்.

அவரை இறுதியா சில தினங்களுக்கு முன்னர் கைதுசெய்த வேளை, பொலிசார் ஆடிப்போய் விட்டார்கள். அவர் வீட்டில் மட்டும் 52 மில்லியன் பவுண்டுகளை அவர்கள் எடுத்துள்ளார்கள். அதுவும் கட்டிலுக்கு அடியில் இருந்து காசாக. வீட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தமாக எடுத்த பணம் 52 மில்லியன் என்கிறார்கள் பொலிசார்.

தகாத வேலை செய்து இவ்வளவு காசை சம்பாதித்த இவர்களால், அதனை கட்டிக் காப்பாற்ற முடிவைல்லை பாருங்கள். வீட்டின் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்திருந்தால் கூட எவராலும் கண்டு பிடித்திருக்க முடியாது. ஆனால் அவ்வளவு நம்பிக்கையோடு, இருந்துள்ளார் இந்த பட்டேல்.