போலியான வாகன பதிவு சான்றிதழ்களை தயாரித்த இருவர்

0
3
11 / 100

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவந்த போலியான வாகனப் பதிவு அலுவலகம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் நேற்று (19) குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வாகன பதிவுக்கான சான்றிதழ்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினியொன்றும், போலியான இலக்கத் தகடுகளும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ முத்திரைகளும், அரச இலட்சினை அடங்கிய ஸ்டிக்கர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.