மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை. மட்டக்களப்பிற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் ஊடாக கடக்கும் சூறாவளி

0
7

வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு பிராந்தியத்தில் வலுவடைந்துள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து, திருகோணமலையிலிருந்து கிழக்கு தென்மேற்கு திசையில் 240 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

புரவி சூறாவளி மேலும் வலுவடைந்து, இன்று மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்கூறப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 75 கிலோமீற்றர் முதல் 85 கிலோ மீற்றர் வரை வீசலாம் என வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.