மச்சாளை திருமணம் செய்யலாமா?

0
29

நானும் மச்சாளும் காதலித்து வருகிறோம். இருவருக்குள்ளும் 7 வயது வித்தியாசமுள்ளது. திருமணத்திற்கு எத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும். மச்சாளை திருமணம் செய்யக்கூடாது என்கிறார்கள். உண்மையா?

டாக்டர் ஞானப்பழம்: வயது வித்தியாசம் அவரவர் உடல் தகுதியைப் பொறுத்தது. ஆண், பெண் இருவரும் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராகிவிட்டால், திருமணம் செய்துகொள்ளலாம். இருப்பினும், நம் நாட்டில் திருமண வயது தொடர்பான சட்டம் உள்ளது. இதன்படி, 21 வயதில் திருமணம் செய்யலாம். 18-21 வயதிற்கிடையில் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம்.

ஆண், பெண்ணுக்கு இடையே இவ்வளவு வயது இடைவெளி இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. நடைமுறை வாழ்க்கைச் சூழல் அடிப்படையில், மணமகனைக் காட்டிலும், மணமகளுக்கு இரண்டு முதல் ஐந்து வயது குறைவாக இருக்கலாம். இது, அவர்களது மனமுதிர்ச்சிக்காகவும், பெண்ணின் இனப்பெருக்க காலம் ஆணைவிட மிகக் குறைவானது என்பதாலும் இருக்கலாம்.”

உங்கள் மச்சாளை திருமணம் செய்ய விரும்புவதாக சொல்லியிருக்கிறீர்கள்.

மருத்துவ அடிப்படையில் நெருங்கிய இரத்தவழிச் சொந்தத்துக்குள் திருமணம்செய்வது பரிந்துரைக்கப்படுவது இல்லை. இதற்குக் காரணம், இந்தத் தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிறவிக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதுதான். இதுதவிர, மரபியல்ரீதியான சில நோய்கள் இந்தக் குழந்தைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

ப.பரமேஸ்வரன் (30)
கொட்டகலை

திருமணமாகி 7 மாதமாகிறது. எமக்கு இன்னும் குழந்தை உருவாகவில்லை. உடலுறவின் போது இன்னும் திருப்தியடைய முடியாதபடி மனைவி நடந்து கொள்கிறார். உறவுக்கு அழைப்பதே போதும்போதுமென்றாகி விடும். இயன்றவரை அவர் அதை தவிர்க்கிறார். என்னில் ஏதாவது குறை கண்டு அப்படி நடக்கிறாரா? அல்லது அவரில் ஏதாவது குறை உள்ளதா?

டாக்டர் ஞானப்பழம்: உங்கள் இருவரிடமும் உடல் சார்ந்த குறை இல்லை. உங்களுக்குள் தாம்பத்தியம் நிகழாமல் இருக்க இரண்டு காரணங்கள் உள்ளன. தாம்பத்தியத்தில் தொடக்கத்தில் இப்படித்தான் இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல அனுபவத்தின் காரணமாக, தாம்பத்திய உறவு மகிழ்ச்சியானதாக மாறிவிடும். தொடக்கத்திலேயே எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு முதல் தவறு.

உங்கள் நீண்ட கடிதம் படித்த போது இரண்டாவது பிரச்னை புரிந்தது, ‘தாம்பத்திய உறவின்போது வலி ஏற்படும்’ என்ற தவறான பயத்தின் காரணமாக மனைவி தன்னையும் அறியாமல் வெஜைனல் தசையை இறுக்கமாக வைத்துக்கொள்வதுதான்.

பல பெண்கள் இப்படித்தான் ஆரம்பத்தில் இருப்பார்கள். தன்னுடைய தோழிகள் சொன்ன சில விஷயங்களைக் கேட்டு, “செக்ஸ் என்றாலே மிகவும் வலி நிறைந்தது, கொடுமையானது என்பதாக மனதில் பதிந்துவிட்டது” என்று பதில் சொல்லும் பல பெண்களை எனது மருத்துவ அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

திருமணத்தின் முன்னதாக சுற்றியிருப்பவர்களால் ஏற்படுத்தப்படும் பயத்தினால், தாம்பத்தியத்தை ரசிக்க ஆசை இருந்தாலும் அவளது ஆழ்மனது தடையாக மாறிவிடுகிறது. இதனால், ஃபோர்பிளே சந்தோஷமாக இருந்தாலும், ஆண் உறுப்பை உள்ளே நுழைக்கும்போது, அவள் ஆழ்மனதுத் தூண்டல் காரணமாக வெஜைனல் தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதற்கு வெஜைனமைஸ் என்று பெயர். இது பொதுவாக, நிறையப் பெண்களிடம் காணப்படும் பிரச்னை. இதுதான் உங்கள் பிரச்சனை.

முதலில் நீங்கள் இருவரும் முறையான ஒரு வைத்தியரை சென்று சந்தியுங்கள். சில மனத்தடைகளை அகற்றினால், உங்கள் இல்லறம் சிறக்கும்.