மஞ்சள் பயன்படுத்துவோருக்கு மீண்டும் எச்சரிக்கை

0
97

இலங்கையில் உள்ள சந்தைகளில் விற்பனையாகும் மஞ்சள் தூளில் கோதுமை மா, அரிசி மா மற்றும் நிறங்கள் ஆகிய கலக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபை மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் தெரியவந்துள்ளது.

சந்தைகளில் உள்ள மஞ்சள் தூளின் பெரும்பான்மையானவற்றில் நூற்று 50 வீதமானவைகளில் மா வகைகள், நிறங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதென அதிகார சபையின் இயக்கு ஏ.ஏ.ஜயசூர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளின் மாதிரிகள் பெற்றுக் கொண்ட மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் குறைவான மஞ்சள் தூள் விற்பனை செய்யப்படுவதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் மாதிரி பெற்று பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்ட மஞ்சளில் நூற்றுக்கு 50 வீதமானவைகளில் அதிக கலப்படம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் அவ்வாறு விற்பனை செய்யும் நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

750 ரூபாய் என்ற சில்லறை விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஞ்சள் ஒரு கிலோ 6000 ரூபாய் போன்ற விலையில் விற்பனை செய்பவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிக விலையிலும் தரம் குறைவிலும் மஞ்சள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரியப்படுத்துமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.