மட்டக்களப்பு மாவட்டத்தினுள் நுழைபவர்கள்,வெளிச்செல்பவர்கள் எல்லையில் சோதனைச் சாவடிகள்!

0
3

மட்டக்களப்பு மாவட்டத்தினுள் நுழைபவர்கள், மற்றும் வெளிச்செல்பவர்களை பதிவு செய்து, கண்காணிக்கும் வகையில், மாவட்ட எல்லைப் பகுதிகளில், பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடந்த மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, வெருகல், பெரியநீலாவணை, பதுளை வீதி, ரிதிதென்ன ஆகிய இடங்களில் பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, உள்நுழைபவர்கள், வெளிச் செல்பவர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.

அத்துடன், உள்நுழையும், வெளிச் செல்லும் நபர்களின் விபரங்களை உடனுக்குடன், மாகாண சுகாதாரப் பணிமனைக்கு அனுப்புவதென்றும், அவர்களைக் கண்காணித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.