மணம்முடித்து 8 ஆண்டுகளாக குழந்தையில்லை… இளம் தம்பதி வீட்டுக்கு சென்ற பால் பாக்கெட் போடும் நபர் கண்ட அதிர்ச்சி காட்சி

0
1402

இந்தியாவில் வீட்டில் இருந்த இளம்தம்பதியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சுக்பீர் (28). இவர் மனைவி மோனிகா (26). இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சுக்பீர் வீட்டுக்கு பால் பாக்கெட் போடும் நபர் வந்து அழைப்பு மணியை வெகுநேரமாக அடித்தும் யாரும் திறக்கவில்லை.

இதனால் உள்ளே சென்று அவர் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். காரணம் சுக்பீரும், மோனிகாவும் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

பொலிசார் கூறுகையில், சுக்பீர் வீட்டுக்கு 4 பேர் பைக்கில் வந்துள்ளனர், இது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

பின்னர் இருவரையும் கட்டிபோட்டுவிட்டு சுட்டு கொன்றுள்ளனர், அவர்கள் வீட்டில் இருந்து பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது கொள்ளைக்காக நடந்த கொலையா அல்லது பொலிசாரை திசை திருப்ப நகை கொள்ளையடிக்கப்பட்டதா என விசாரித்து வருகிறோம்.

விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என கூறியுள்ளனர்.