மண்சரிவு அபாயம்… 50 பேர் இடம்பெயர்வு!

0
6

களுத்துறை – பதுரளிய பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் வரை கொஸ்குலன விகாரைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.