மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் நேர்ந்த விபரீதம்…

0
8

திருகோணமலை- உப்புவெளி புளியங்குளம்-தேவ நகர் பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர், படுகாயமடைந்துள்ளார். நேற்றிரவு 9.20 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், திருகோணமலை-புளியங்குளம்-தேவ நகர் பகுதியைச் சேர்ந்த தனேந்திரன் அர்ஜுன் (10 வயது) என்ற சிறுவன் படுகாயமடைந்துள்ளார் என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.