மனித உடலில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி ஆராய்ச்சி

0
4
8 / 100

மனித உடலில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி ஆராய்ச்சி – சிறுநீரகம் செயற்படுகின்றது என்கின்றனர் அமெரிக்க சத்திரகிசிச்சை நிபுணர்கள்

மனித உடலில் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தியுள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சிறுநீரகம் செயற்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஒருவரின் உடலிற்கு வெளியே pair of large blood vessels outside the body பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திய சத்திர கிசிச்சை நிபுணர்கள் அதனை இரண்டு நாட்கள் அவதானித்துள்ளனர்.

அதன்போது சிறுநீரகம் தனது வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்தது என சத்திரகிசிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நியுயோர்க் நகரில் உள்ள என்வையூ லாங்கோன் மருத்துவமனையில் இடம்பெற்ற இந்த முயற்சிக்கு தலைமை தாங்கிய மருத்துவர் ரொபேர்ட் மொன்டகொமெரி சிறுநீரகம் வழமை போல செயற்பட்டது என தெரிவித்துள்ளார்.

நாங்கள் பன்றியின் சிறுநீரகத்தை பொருத்திய வேளை அது நிராகரிக்கப்படும் என நினைத்தோம் ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என மருத்துவர்மொன்டகொமெரி தெரிவித்ள்ளார்.

இந்த ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ள மினெசொட்டா பல்கலைகழகத்தின் மருத்துவ கல்லூரியை சேர்ந்த மருத்துவர் அன்ரூ அடம்ஸ் நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றோம் என்ற நம்பிக்கையை நோயாளிகள் ஆராய்;ச்சியாளர்களிற்கு இது வழங்கும் எனதெரிவித்துள்ளார்.

உறுப்பு தட்டுப்பாடு காரணமாக சமீபகாலங்களில் ஆராய்ச்சியாளர்கள் பன்றிகள் குறித்து அதிக கவனம் செலுத்துகின்றனர்.