மறு அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக பாடசாலைகளை மூட உத்தரவு

0
13

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.

மருதனார்மடம் கொத்தணியால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.