மஹிந்த ராஜபக்சவின் கட்சி வெற்றிபெற்றதற்கு முல்லைத்தீவில் கொண்டாட்டம்

0
3

இம்மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டி இருந்தது.

அந்த வகையில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகி உள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட ரத்னபிரிய பந்துவினுடைய ஆதரவாளர்கள் முல்லைத்தீவில் இன்று (15) கேக் வெட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.