மாகாணசபைத் தேர்தல் எப்போது? வெளிவந்த அறவிப்பு

0
19

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படலாம் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லாட்சி அரசால் ஒத்திவைக்கப்பட்ட மாகாணசபை தேர்தலை அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் உள்ள 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக, தடங்கலாக உள்ள காரணிகள் சட்டத்திருத்தம் மூலம் சீர் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசு பரிசீலித்தாலும் நிதி பற்றாக்குறை காரணமாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.