மாடுகளை கொலை செய்தல் தொடர்பாக வெளியான புதிய தகவல்

0
26

இலங்கையில் கால்நடைகளை படுகொலை செய்வதற்கு தடை விதிப்பது தொடர்பான முடிவு ஒரு மாதம் தாமதமாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஒரு முடிவினை எட்டுவதற்கு முன்னர் அந்தந்த குழுக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கையில் கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கும் யோசனையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றக் குழு குறித்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.