மாணவர்களின் வருகை குறைவு

0
6
16 / 100

நீண்ட நாட்களின் பின்னர் நாட்டில் இன்று (21.10.2021) முதல் 200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகள் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அரச தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் வியாழக்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளியின் பின்னர் பாடசாலை ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்ப நிலை காணப்படுவதால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

பாடசாலைகளில் மாணவர்களுக்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சுகாதார நடைமுறைகள் பின் பற்றி மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று வருகின்றனர்.

மேலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் குறித்த பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான விபரங்கள் புலனாய்வுத்துறையினர் நேரடியாக சென்று சேகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.