‘மாநாடு’க்கு முன் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கும் சிம்பு

0
5

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, மாநாடு படத்திற்கு முன் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
தற்போது நிபந்தனைகளுடன் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஏனெனில், அரசியல் கூட்டங்களை வைத்து மாநாடு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய காட்சிகளுக்கு கூட்டம் தேவைப்படும். அதிக நபர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் இப்படத்தின் படப்பிடிப்பை தற்போது துவங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே அதற்கு முன்பாக சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளாராம். இப்படத்தை குறுகியகாலத்திற்குள் எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சிம்பு மாநாடு படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.