மாவீரர் நாள் நிகழ்வுகள் . பல நாடுகளில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான

0
14

தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் தின அனுஸ்டிப்பு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த நிலையில் லண்டன் வரலாற்று மையத்திலும் பெருந்திரளான மக்களின் ஒன்றுகூடலுடன் சற்றுமுன் மாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன.

இதன்போது, தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழீழ இலட்சியத்துக்காகவும் போராடி வீரச்சாவடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையின் வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் மாவீரர்களின் உறவினர்களுடன் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, டென்மார்க், பெல்ஜியம், நியூசிலாந்து , சுவீடன் உலகின் பலநாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.