மாஸ் காட்டும் எடப்பாடி – பேச்சுவார்த்தையை தொடங்கிய ரஜினி

0
20

இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை’ என்று சமூகவலைதளங்களில் தன்னைக் கிண்டலடிக்கும் பதிவுகளை எல்லாம் ரஜினி ரசித்து ரசித்து சிரிக்கிறாராம். ‘இப்ப இருக்குற பசங்க செம டேலன்ட்டா இருங்காங்கல்ல…’ என்பதுதான் அவரது கமென்ட்டாக உள்ளதாம். இன்னொரு பக்கம் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தனக்கு நெருக்கமான இருவரை வைத்து ஆரம்பித்திருக்கிறாராம் ரஜினி. அவர்களில் ஒருவர் பிரபல கல்விக்குழுமங்களின் தலைவர் என்று கூறப்படுகிறது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க.வில் கோலோச்சும் ஒரு அமைச்சரின் உறவினர், கொங்கு மண்டல சமுதாய அமைப்பின் தலைவர் என பலருடனும் ரஜினி பேசிவருகிறாராம். கடந்த 2014, 2016 தேர்தல்களின்போது, சமூக வலைதளங்களில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை காமெடியனாக சிலர் திட்டமிட்டு உருவகப்படுத்தியதுபோல, ரஜினியையும் உருவகப்படுத்தக்கூடும். இதை முதலில் உடைக்கும் வேலையை ரஜினி ஆரம்பித்துவிட்டார்” என்கிறது ரஜினிக்கு நெருக்கமான வட்டாரம்.

இது இவ்வாறு இருக்க அ.தி.மு.க கூட்டணி சரிவரவில்லை என்றால், சசிகலாவோடு கூட கூட்டுச் சேர ரஜனி தயங்கப் போவது இல்லை என்கிறார்கள். வேர்கவுட் ஆகுமா ?