மிக விரை­வில் ஊர­டங்கு முடி­வுக்கு வந்­து­வி­டும் எனும் நம்­பிக்­கை­யில் திரை­யு­ல­கத்­தி­னர் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தயா­ராகி வரு­கின்­ற­னர்

0
7

உச்ச நடி­கர்­கள் தொடங்கி துணை நடி­கர்­கள் வரை யார் யார் எந்­தெந்த படங்­களில் நடித்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர், அவர்­கள் அடுத்து நடிக்­கும் படங்­கள் என்­னென்ன என்­பது குறித்து தின­மும் பல்­வேறு தக­வல்­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன. அவற்­றுள் உறுதி செய்­யப்­பட்ட சில தக­வல்­களைப் பார்ப்­போம்.

தெலுங்கு நடி­கர் விஜய் தேவ­ர­கொண்டா ஒரு பக்­கம் நடித்­துக்­கொண்டே மறு­பக்­கம் படங்­களும் தயா­ரிக்­கி­றார். இவ­ரது தயா­ரிப்­பில் உரு­வான ‘மீக்கு மாத்­தி­ரமே செப்தா’ தெலுங்கு படத்­தின் மூலம்­தான் சினி­மா­வில் அறி­மு­க­மா­னார் வாணி போஜன்.


இதை­ய­டுத்து தமி­ழில் நடித்த ‘ஓ மை கட­வுளே’ பட­மும் அவ­ருக்கு நல்ல பெயரை வாங்­கிக் கொடுத்­தது. வைபவ்­வு­டன் இவர் நடித்த ‘லாக்­கப்’ நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யான நிலை­யில் அடுத்து அதர்­வா­வு­டன் ஒரு படம், விக்­ரம் பிர­பு­வு­டன் ஒரு படம் என இரண்டு புதுப்­ப­டங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்­ளார்.

இவை இரண்­டுமே தமிழ், தெலுங்கு என இரு மொழி­களில் உரு­வாகி வரு­கின்­றன. மேலும் மற்­றொரு முன்­னணி நடி­கர் படத்­தில் நடிப்­பது தொடர்­பா­க­வும் பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வரு­கி­ற­தாம்.

‘கபாலி’யில் நடித்­த­பி­றகு தமி­ழில் ஒரு சுற்று சாதிப்­பார் என்று எதிர்­பார்த்த நிலை­யில் இந்­திப் பக்­கம் ஒதுங்­கி­விட்­டார் ராதிகா ஆப்தே.

‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ உள்­ளிட்ட சில தமிழ்ப் படங்­களில் நடித்­ததை அவரே மறந்­து­விட்­டாரோ என்று நினைக்­கத் தோன்­றி­யது. இந்­நி­லை­யில் நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு தமி­ழில் உரு­வா­கும் இணை­யத் தொட­ரில் ஒப்­பந்­த­மாகி இருக்­கி­றார் ராதிகா. அவர் இந்­தி­யில் நடித்த இணை­யத் தொடரை தமி­ழில் மொழி­மாற்­றம் செய்­யும் முயற்­சி­யும் நடந்து வரு­கிறது.

கீர்த்தி சுரேஷ் மீண்­டும் தமிழ்ப் படங்­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார். இந்­நி­லை­யில் அருண் மாதேஸ்­வ­ரன் இயக்­கும் புதுப்­ப­டத்­தில் இவர் ஒப்பந்­த­மாகி உள்­ளார்.

இது நாய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் கதை­யாம். இந்­தப் படத்­தில் முக்­கி­ய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க உள்­ளார் இயக்­கு­நர் செல்­வ­ரா­க­வன். இந்­தத் தகவல் பல­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்தி உள்­ளது. செல்­வ­ரா­க­வ­னைத் தொடர்பு கொண்டு இது உண்­மையா என்று கேட்­கி­றார்­க­ளாம்.

இப்­ப­டத்­துக்கு ‘சாணிக் காகி­தம்’ என்று தலைப்பு வைத்­துள்­ள­னர். இதன் முதல் தோற்ற சுவ­ரொட்­டி­யும் வெளி­யாகி உள்­ளது. அதை தமது டுவிட்­டர் பக்­கத்­தில் வெளி­யிட்­டுள்­ளார் செல்வா.

அவர் நடி­க­ராக அறி­மு­க­மா­வதை வர­வேற்­ப­தாகக் குறிப்­பிட்டு பல­ரும் வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர். செல்­வ­ரா­க­வன் போன்ற அனு­பவ இயக்­கு­ந­ரு­டன் இணைந்து நடிப்­பது உற்­சா­க­ம­ளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளார் கீர்த்தி சுரேஷ்.

‘மாநாடு’, ‘மகா’ உள்­ளிட்ட படங்­களில் நடித்து­வ­ரும் சிம்பு அடுத்து மிஷ்­கின் இயக்­கத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளார். இது பெரும் பொருட்­செ­ல­வில் உரு­வா­கும் பட­மாம். ஊர­டங்கு முடிந்த பிறகு படப்­பி­டிப்பு துவங்க உள்­ளது.

இந்­நி­லை­யில் இப்­ப­டத்­தில் நாய­கி­யாக நடிக்க ஷ்ரு­தி­ஹா­ச­னி­டம் பேச்­சு­வார்த்தை நடந்து வரு­வ­தா­கத் தக­வல். மிஷ்­கின் கூறிய கதை ஷ்ரு­திக்கு மிக­வும் பிடித்துப் போன­தான்.

எனி­னும் தமி­ழில் அவர் தற்­போது நடித்­து­வ­ரும் ‘லாபம்’ படத்­தின் படப்­பி­டிப்பு முடிந்த பிறகே கால்­ஷீட் ஒதுக்க முடி­யும் என மிஷ்­கி­னி­டம் தெரி­வித்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.

பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்­பு­கள் குவிந்து வரு­கின்­றன. தற்­போது ‘குருதியாட்டம்’, ‘களத்­தில் சந்­திப்­போம்’, ‘பொம்மை’, ‘இந்­தி­யன்-2’ உள்­ளிட்ட படங்­களில் நடித்து வரு­கி­றார்.

அடுத்­தாண்டு ஜூன் இறுதி வரை கால்­ஷீட் இல்லை என்று தெரி­வித்த பிறகும் பல இயக்­கு­நர்­கள் தங்­கள் படத்­தில் நடிக்­கு­மாறு கேட்டு வரு­கி­றார்­க­ளாம்.

இந்­நி­லை­யில் ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்­டர்’ ஆகிய படங்­களை இயக்­கிய நெல்­சனும் பிரி­யா­வி­டம் கால்­ஷீட் கேட்­டுள்­ளார்.

நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டும் முடி­வு­டன் ஒரு படத்தை இவர் இயக்க உள்­ளா­ராம். அவர் சொன்ன கதை பிடித்­துப் போன­தால் எப்­ப­டி­யே­னும் கால்­ஷீட் கொடுக்க வேண்­டும் என பிரியா முயற்சி செய்து வருவதாகத் தகவல்.