மின் விநியோகம் எப்போது வழமைக்கு திரும்பும்?

0
15

இன்னும் சில மணித்தியாலங்களில் நாடு முழுவதும் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிலைமையை ஆய்வு செய்வதற்கும் மின் விநியோகம் தடைபடுவதற்கான காரணத்தை கண்டறியவும் ஒரு குழுவை நியமிக்க அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு மின் நிலையத்தையும் கைமுறையாக மீண்டும் செயற்படுத்த வேண்டியிருப்பதால் மின் விநியோகத்தை மீட்டெடுக்க இன்னும் அதிக நேரம் எடுக்கும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் மின்சாரம் வழங்கல் ஒரு சவாலான பணியாக இருப்பதால் இன்று இரவு 8 மணியளவில் நாடு முழுவதும் முழுமையாக மின்சாரத்தை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுவதாக பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.