மியன்மார் சிறைகளில் இருந்த விடுதலை

0
2
11 / 100

இராணுவ ஆட்சியாளர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்டவர்கள் – மியன்மார் சிறைகளில் இருந்த விடுதலை

மியன்மாரில் இராணுவ ஆட்சியாளர்களிற்கு எதிராக ஆர்;பபாட்டங்களில் ஈடுபட்டவேளை கைதுசெய்யப்பட்ட பலர் பல மாதங்களின் பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவம் நியமித்த அரசாங்கத்தின் தலைவர் ஜெனரல் மின் அவுங் கிளாங் 5500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்தே அரசாங்கத்திற்கு எதிராகஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தென்கிழக்காசிய நாடுகள் சங்கம் தனது உச்சிமாநாட்டிற்கு இராணுவத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதலைவரிற்கு அழைப்பு விடுக்க மறுத்ததை தொடர்ந்தே அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.