மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று… நியூசிலாந்தின் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு

0
44

நியூஸிலாந்தின் பொதுத் தேர்தலானது ஒத்தி வைக்கப்படலாம் என்று அந் நாட்டுப் பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு பின்னர் நியூஸிலாந்தில் புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலக்கான வாக்கெடுப்பு பணிகளை ஜசிந்த ஆர்டர்ன் தாமதப்படுத்தியுள்ளதுடன், செப்டெம்பர் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கான பாராளுமன்ற கலைப்பினை அடுத்த திங்கள் வரையும் அவர் ஒத்தி வைத்துள்ளார்.

தேர்தலை தாமதப்படுத்துவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் அவர் எடுக்காத நிலையில், அதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

102 நாட்களுக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை அக்லாந்தில் ஒரு குடும்பத்தில் நால்வர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் ஒரு குடும்பத்தில் நால்வர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுளள்மை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 102 நாட்களுக்கு பின்னர் அந்த நகரம் 3 ஆம் நிலை கொரோனா அபாயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.