மீண்டும் திறக்கப்பட தயாராகும் கட்டுநாயக்க விமான நிலையம்

0
5

அமைச்சுகளின் எதிர்வரும் திட்டங்களை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பணிப்புரை விடுத்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் கண்கானிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பிரிவுகளின் அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு தயார் என அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய லெபனான் உட்பட மேலும் 3 நாடுகளை சேர்ந்த 209 இலங்கையர்கள் நேற்று மற்றும் இன்றைய தினம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.