முடி உதிர்வதை தடுக்கவும், முடியை பட்டுப்போல் பாதுகாக்கவும் அட்டகாசமான டிப்ஸ்

0
65

நம்மை சுற்றீ இருக்கும் மூலிகைகளை கொண்டே வைத்தியம் பார்த்துகொள்வது போல், அழகு பராமரிப்பும் மேற்கொள்ள முடியும். குறீப்பாக இயற்கை முறையில் பக்கவிளைவில்லாமல் முடி பராமரிப்பை மேற்கொள்ளவிரும்புபவர்களுக்கு இந்த மூலிகைகள் சிறப்பாக கைகொடுக்கும்.

முடி உதிர்வு பிரச்சனைக்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும் முறையான பராமரிப்பின் மூலம் முடிக்கு ஊட்டம் அளித்தாலே பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அப்படி வலுகொடுக்ககூடிய மூலிகைகள் குறித்து தான் நாம் பார்க்க போகிறோம்.

கறிவேப்பிலை

எதுவுமே தேவையில்லை. கறிவேப்பிலையை கொண்டே முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். கறிவேப்பிலையில் இருக்கும் புரதமும், பீட்டா கரோட்டினும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

கூந்தலின் வறட்சியை தடுத்து கூந்தலை ஈரப்பதமாக வைக்க இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உதவுகின்றன. அதனால் தான் கூந்தலுக்கான தைலத்தில் கறிவேப்பிலை முதல் இடத்தில் இருக்கிறது. கூந்தலுக்கான ஹேர் பேக் பயன்பாட்டிலும் கறிவேப்பிலைக்கு தனி இடம் உண்டு.

முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்துவதோடு பெருமளவு இவை இளநரை வராமலும் தடுக்கிறது.

தேவை – கறிவேப்பிலை – 15 இலைகள்

​செம்பருத்தி இலை

செம்பருத்தி சமீபவருடங்களாகவே செம்பருத்தி தேநீர் ஆரோக்கியம் குறித்த நன்மைக்காக குடித்துவருகிறோம். செம்பருத்தி இலைகள் இயற்கையாகவே கொழகொழப்புத் தன்மை கொண்டவை. இவை முடி உதிர்வை தடுத்து முடிக்கு ஊட்டம் அளிக்கிறது.

முன்பு கூந்தலை அழகாக வைத்திருக்க விரும்புபவர்கள் செம்பருத்தி இலையை தனியாக அரைத்து கூந்தலில் தடவி கொள்வார்கள். இவை கூந்தலை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். சொல்லபோனால் சீயக்காய்க்கு பதிலாக வெறும் செம்பருத்தி இலையை மட்டுமே பயன்படுத்தியவர்களும் உண்டு.

தேவை – செம்பருத்தி இலை – 5

​கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி கீரையில் வெள்ளை மஞ்சள் இரண்டுமே உண்டு. மஞ்சள் நிற கரிசலாங்கண்ணியை கூந்தல் தைலம் காய்ச்ச, இயற்கை ஹேர் டை போட என்று பயன்படுத்துவதுண்டு. இரும்புச்சத்தும், தங்கசத்தும் நிறைந்தது இந்த கீரை.

கரிசலாங்கண்ணியை அரைத்து வடை போல் தட்டி நிழலில் உலர்த்தி காய வைத்து, தேங்காய் எண்ணெயில் சேர்த்து அந்த எண்ணெயை தடவிவந்தால் முடி கருமையாகும். மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் இந்த கீரை கிடைகக்காத நாட்களில் இதன் பொடியையும் பயன்படுத்தலாம்.

தேவை – கரிசலாங்கண்ணி கீரை – சிறு கைப்பிடி அளவு

​ஆவாரம் பூ இலை

ஆவாரம் செடியில் உள்ள பூ, பட்டை, இலை, வேர் என்று அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டவை. இவைசருமத்தின் வறட்சியை போக்க கூடியது. அதுபோலவே கூந்தலின் வறட்சியை போக்கி கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ஆவாரம் பூவை அரைத்து தலைக்கு குளித்த பிறகு முடியில் தேய்த்து மீண்டும் வெறும் நீரால் கூந்தலை அலசினால் முடி கொட்டுவது நிற்கும் . கூந்தல் அடர்த்தி அதிகரிக்க உதவும். ஆவாரம் பூ இலை கிடைக்காதவர்கள் இந்த பொடியை பயன்படுத்தலாம். (தற்போது நீரிழிவுக்கு ஆவாரம் பூ தேநீர் குடிப்பதால் இவை எளிதாக நகரங்களிலும் கிடைக்கிறது)

தேவை – ஆவாரம் பூ இலை – 15 அல்லது ஆவாரம் பூ – 3

மருதாணி

கூந்தலின் நிறத்துக்கு இயற்கையாக பயன்படுத்தும் ஹேர் டை மட்டும் அல்ல. உச்சந்தலை உஷ்ணத்தை தவிர்க்க இவை உதவுகிறது. எப்போது மருதாணி கிடைத்தாலும் அதை அரைத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு காய்ச்சி விடுவார்கள். இதன் மணமே அவ்வளவு அருமையாக இருக்கும்.

இந்த மருதாணி இலைகள் முடி உதிர்வை கட்டுக்குள் வைக்குமளவு கூந்தலுக்கு குளிர்ச்சியை தருகிறது. கூடுதலாக நரை முடி பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது.

தேவை – மருதாணி இலை – 1 கைப்பிடி

​பயன்படுத்தும் முறை

கொடுக்கப்பட்ட எல்லாமே இலையாக இருந்தால் ஃப்ரெஷ்ஷாக அனைத்து சத்துகளும் சாறு வழியாக கூந்தலில் இறங்கும். இலைகள் கிடைக்காத நிலையில் பொடியையும் பயன்படுத்தலாம். அனைத்தையும் அரைத்து கூந்தலை சுத்தம் செய்ய சில துளிகள் எலுமிச்சை சாறையும் சேர்க்கவும்.

பொடுகும் போகணும் முடியும் நீளமா வளரணுமா? இந்த எண்ணெய் இப்படி யூஸ் பண்ணுங்க

கூந்தலை சுத்தம் செய்து இந்த கலவையை தடவி 40 நிமிடங்கள் கழித்து வெறும் நீரால் அலசி கூந்தலை சுத்தம் செய்யவும்.

முடி உதிர்வு அதிகமாக இருந்தால் வாரம் ஒரு முறை செய்யலாம். இயல்பான பராமரிப்புக்கு மாதம் இருமுறை செய்தால் போதும். முடி உதிர்வு குறைந்து கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். முதல் முறையிலேயே பலனும் கிடைக்கும்.