முடி வெட்ட வந்த 125 பேருக்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தல்

0
14

கஹதுடுவ பிரதேசத்தில் முடி வெட்டும் சலூன் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரதேச சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய சலூன் சீல் வைக்கப்பட்டு முடி வெட்ட வந்த 125 பேருக்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் மீன் கொள்வனவு செய்த கஹதுடுவ பிரதேச மீன் விற்பனையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

அவர் அந்த சலூனிற்கு வந்தமையினால் சலூன் உரிமையாளரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மீன் வர்த்தகர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் முடிவெட்டும் நபர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போதே இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

28 வயதான முடிவெட்டும் நபர் ஹொரன பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவரது வீடு உட்பட 4 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹொரன சுகாதார அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.