முதல் தடவையாக நாடாளுமன்றிற்கு ஜனாதிபதி பிரதமருடன் வருகை

0
7

2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றிற்கு விஜயம் செய்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபைக்கு வருகை தருகின்றமை இதுவே முதல் தடவையாகும்.