முன்னாள் உறுப்பினர்களுள் ரணிலுக்கு மடடும் முன்னுரிமை

0
11

கடந்த பொது தேர்தலில் தோல்வியடைந்த 81 முன்னாள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் முன்னாள் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை நீக்குவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பினை நீக்குவதற்கு இதுவரையில் ஆலோசனை வழங்கப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தோல்வியடைந்த உறுப்பினர்களின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளில் சிலர் தற்போது வரையில் பாதுகாப்பு பிரிவிற்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.