முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

0
5

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலின்போது திவிநெகும திணைக்களத்துக்கு சொந்தமான 29.4 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதியின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவம் பொறித்த ஐம்பது லட்சம் பஞ்சாங்க நாட்காட்டிகள் அச்சிடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் பசில் ராஜபக்சவின் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.