முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இட்டுள்ள பேஸ்புக் பதிவு

0
18

கடுமையான சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்ட பின்னர், அதன் உச்ச பிரதிபலன்களை பெற்றுக் கொள்ள சிறிது காலம் அமைதியாக காத்திருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சரவை நியமிக்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை.

இதன் பின்னரே அவர் பேஸ்புக்கில் இந்த பதிவை இட்டுள்ளமை முக்கியமாகும்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அன்றைய ராஜபக்ச அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சிகளுடன் இரகசியமான அரசியல் உடன்பாடுகளை ஏற்படுத்தி கொண்டு, அந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டு மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தார்.

ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினத்திற்கு முதல் நாள் கூட அவர் எந்த மாற்றங்களையும் காட்டிக் கொள்ளாது அலரி மாளிகைக்கு சென்று அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அப்பம் சாப்பிட்டு விட்டு திரும்பியதாக கூறப்படுகிறது.