முன்னாள் பிரதியமைச்சர் முஹமட் மஹ்ரூப் கைது

0
9

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதியமைச்சராக பதவி வகித்த மொஹமட் மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் மற்றுமொரு நபரையும் குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்துள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் திருகோணமலை கின்னியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாருக் மொஹமட் அஸ்லாம் என்ற நபர் மாத்தளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலத்தில் லங்கா சதோச நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தி சம்பவங்கள் தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.