முள்ளிவாய்க்கால் பகுதியில் கார்த்திகைதீபம் ஏற்றுவதற்கு பொலிஸார் தடை

0
16

முள்ளிவாய்க்கால் பகுதியில் தீபத்திருநாள் தீபம் ஏற்றுவதற்கு முல்லைத்தீவு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இன்று மாலை 7.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸார் பிரதான வீதி அருகே தீபம் ஏற்றிய பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தியதாகத் தெரியவருகின்றது.

மேலும் ஏற்றிய தீபத்தை அணைக்கும் படியும் அல்லது கைது செய்யப்படுவீர்கள் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கார்த்திகையில் விளக்கிடு என்பது உலகில் உள்ள எல்லா இந்துக்களும் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இவ்வாறான பாரம்பரிய கலாச்சார நிகழ்வை இன்று பொலிஸார் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உடையார் கட்டு தெற்கு மற்றும் குரவில் பகுதியில் படையினரின் முகாம்களுக்கு அருகில் உள்ள மக்கள் கார்த்திகை விளக்கீட்டினை செய்ய முடியாத நிலையில் படையினர் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.