மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு

0
5

 

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய, பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை இன்றைய தினம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தின் கொவிட் 19 அவதானமிக்க பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கே முதற்கட்டமாக இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.